நேபாள சிறையில் இருந்து விடுதலையான தொடர் கொலையாளி சார்லஸ் சோப்ராஜ், பிரான்ஸ் நாட்டில் குடிபுகுந்தார்..!
நேபாள சிறையில் இருந்து விடுதலையான சார்லஸ் சோப்ராஜ், பிரான்ஸ் நாட்டில் குடிபுகுந்தார். பிரெஞ்ச் குடிமகனான 78 வயது சார்லஸ் சோப்ராஜ், இந்திய -வியட்நாம் கலப்பு பெற்றோருக்குப் பிறந்தவராவார்.
ஆசியாவின் பல்வேறு நாடுகளில் 30க்கும் மேற்பட்ட பெண்களை கொடூரமாக கொலை செய்து தமது ஆயுளின் கணிசமான பகுதியை சிறைவாழ்க்கையில் கழித்துள்ள சார்லஸ் சோப்ராஜ் காட்மண்டுவில் இருந்து விமானம் மூலம் கத்தார் வழியாக பிரான்ஸ் தலைநகரான பாரீஸ் சென்றடைந்தார்.
சோப்ராஜ் மீது வழக்குத் தொடரப்படுமா என்பது குறித்து பிரான்ஸ் அரசுத் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை
Comments