பேருந்தில் 5½ கிலோ கஞ்சா சாக்லேட்களுடன் வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் கைது..!
விழுப்புரம் மாவட்டத்தில் பேருந்தில் கடத்தி வந்த ஐந்தரை கிலோ கஞ்சா சாக்லெட்டுகள் மற்றும் 25 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், வடமாநில தொழிலாளர்கள் 3 பேரை கைது செய்தனர்.
புதுச்சேரியிலிருந்து( விழுப்புரத்திற்கு) கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின்படி, ரோந்துப் பணியிலிருந்த போலீசார் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டைகளில் 924 பாக்கெட்டுகளில் கஞ்சா சாக்லேட்டுகளும், 25 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேரும் (புதுச்சேரி அருகே தங்கியிருந்து கூலிவேலை செய்து வருவதும்,) கஞ்சா சாக்லேட்டுகளை மொத்தமாக வாங்கி வந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
Comments