கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி
கிறிஸ்துமஸ் திருவிழாவையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவு திருப்பலிகள் நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
சென்னை சாந்தோம் தேவாலயம் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இங்கு நள்ளிரவில் நடைபெற்ற திருப்பலியில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இதே போன்று சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திலும் கிறிஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இங்கு நள்ளிரவில் நடைபெற்ற திருப்பலியில் ஏராளமான ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். வெளியூர்களில் இருந்து சுற்றுலா வந்தவர்களும் இங்கு நடைபெற்ற பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் அமைந்துள்ள பழமையான தேவாலயமான புனித சவேரியார் பேராலயத்தில் கிறிஸ்து பிறப்பு சிறப்பு பிரார்த்தனை மற்றும் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி புதுச்சேரி முழுவதுமுள்ள தேவாலயங்களில் நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் வெளிநாட்டினர், வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட ஏராளமான கிறிஸ்துவர்கள் குடும்பங்களுடன் பங்கேற்று பிராத்தனையில் ஈடுபட்டனர்
இதே போன்று திருச்சி , மதுரை தூத்துக்குடி, திருவள்ளூர், கோவை, கரூர், விழுப்புரம் , மயிலாடுதுறை ,திண்டிவனம், நாமக்கல், சிவகங்கை திருக்கோவிலூர் ஆகிய இடங்களில் உள்ள ஆலயங்களிலும் நள்ளிரவில் கூட்டுதிருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
Comments