காலிமனையிலிருந்து 10 அடி சுரங்கம் தோண்டி வங்கியில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் கொள்ளை.. சிசிடிவியை வேறுபக்கமாக கைவரிசை..!

0 2691
காலிமனையிலிருந்து 10 அடி சுரங்கம் தோண்டி வங்கியில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் கொள்ளை.. சிசிடிவியை வேறுபக்கமாக கைவரிசை..!

உத்தரப்பிரதேசம் கான்பூரில் 10 அடி நீளத்திற்கு சுரங்கம் அமைத்து எஸ்பிஐ வங்கியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்றனர்.

வங்கியின் அருகிலுள்ள காலிமனையிலிருந்து சுரங்கம் தோண்டி உள்ளே புகுந்தவர்கள், அலராம் அமைப்பினை துண்டித்து விட்டு, கியாஸ் கட்டர் மூலமாக லாக்கரை உடைத்ததோடு, சிசிடிவி கேமராவையும் வேறுபக்கமாக திருப்பி வைத்துள்ளனர்.

மொத்தம் 1 கிலோ 8 கிராம் நகைகள் திருடு போனதாகவும், கைரேகை பதிவுகளை கைப்பற்றி விசாரித்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments