கடன் மோசடி வழக்கில் ஐசிஐசிஐ முன்னாள் சிஇஓ சந்தா கோச்சார், கணவர் தீபக்குடன் கைது..!

0 2313

ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார், அவரின் கணவர் தீபக் ஆகியோரை கடன் மோசடி வழக்கில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

2009 முதல் 2011 வரையில் அவர் பதவியில் இருந்த காலத்தில் விடியோகான் நிறுவனத்திற்கு ஆயிரத்து 875 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது.

அந்த கடன் தொகை சந்தா கோச்சாரின் கணவர் நடத்தி வந்த நிறுவனத்திற்கு பல்வேறு தவணைகளாக மாற்றப்பட்டது. வீடியோகான் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட கடன் திரும்பி வராத கடனாக அறிவிக்கப்பட்டதால், ஐசிஐசிஐ வங்கிக்கு ஆயிரத்து 730 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

(கடந்த 2018- ம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரி, நிர்வாக இயக்குனர் பதவிகளில் இருந்து சந்தா கோச்சார் விலகினார்.) வீடியோகான் கடன் மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இந்த வழக்கில், அமலாக்கத்துறையிலால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட சந்தா கோச்சார் பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் பதவியைப் பயன்படுத்தி கடன் மோசடி செய்த வழக்கில் சிபிஐ அவரையும் அவர் கணவரையும் மீண்டும் கைது செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments