சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல ஜெயலலிதா மறுத்தார் - வி.கே. சசிகலா
சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச்செல்ல ஜெயலலிதா மறுத்ததாக, வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்பாக்கம் ஆதரவற்றோர் இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், அங்குள்ளவர்களுக்கு புடவை, வேட்டி உள்ளிட்ட உதவிகளை வழங்கினார்.
இது குறித்து பின்னர் செய்தியாளரிடம் பேசிய சசிகலா, இறக்கும் அன்று மாலையில் கூட ஜெயலலிதா தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார் , டிசம்பர் 19 ம் தேதி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பலாம் என்று திட்டமிட்டு , செவிலியர்களுக்கு பரிசளிக்க வளையல்களை அவர் வாங்கி வைத்திருந்தார்.
சிகிச்சைக்கு வெளிநாட்டிற்கு சொல்லலாமா என வெளிநாட்டு மருத்துவர்கள் கேட்டபோது வேண்டாம் என ஜெயலலிதா மறுத்ததாகவும், தமிழகத்திலேயே நல்ல சிகிச்சை கிடைப்பதாகவும் , சிகிச்சை மூலம் உடல் நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக ஜெயலலிதா கூறியதாக சசிகலா தெரிவித்தார்.
Comments