ஆஞ்சநேயர் அவதரித்த நாளான இன்று அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்
மார்கழி மாத அமாவாசை மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் அவதரித்த நாளான இன்று, அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி, நாமக்கல்லில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமி கோயில் சுமார் 2 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடை மாலை சாத்தப்பட்டது.
விழுப்புரம் பஞ்சவடி பகுதியில் உள்ள 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமிக்கு 2 ஆயிரம் லிட்டர் பால் மற்றும் திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர் உட்பட 16 வகையான அபிஷேங்கள் நடைபெற்றன.
இதே போல சென்னை நங்கநல்லூர், கோவில்பட்டி, பெரியகுளம் பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
Comments