எண்ணூர் செல்லும் சாலையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலி அடையாளம் தெரியாத வாகனம் மோதி சேதம்

0 1796

வடசென்னை அனல் மின் நிலையம் அருகே கனரக வாகனங்கள் செல்வதை தடுக்க அமைக்கப்பட்ட தடுப்பு வேலி, அடையாளம் தெரியாத வாகனம் மோதி சேதமடைந்தது.

அதானி துறைமுகம், எண்ணூர் துறைமுகம், வடசென்னை அனல் மின் நிலையம் ஆகிய இடங்களுக்கு செல்லும் கனரக லாரிகள், துறைமுக சாலையில் இருந்து வல்லூர் வழியே, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு சென்று, அங்கிருந்து தான் செல்ல வேண்டும்.

ஆனால் பல லாரிகள் வடசென்னை அனல் மின் நிலையத்தை ஒட்டி கத்திவாக்கம், எண்ணூர் சாலையில் செல்வதால், விபத்துகள் நேரிடுவதாக, மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.

கனரக வாகனங்கள் எண்ணூர் வழியே செல்வதை தடுக்க, தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. தற்போது போக்குவரத்து போலீசார், இந்த தடுப்பு வேலியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments