அதிமுக ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட திட்டத்திற்கு புதிய பெயர் சூட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் விமர்சனம்

0 2247

அதிமுக ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட, அரசு பள்ளிகளை மேம்படுத்த நிதி திரட்டும் இணையதள திட்டத்தையே, பெயர் மாற்றம் செய்து "நம்ம ஸ்கூல்"என்ற பெயர் வைக்கப்பட்டிருப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2019ம் ஆண்டு தலைமைச்செயலகத்தில் ஆன்லைன் மூலம் நிதி திரட்டும் இணையதளத்தை, தான் தொடங்கி வைத்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்திட்டத்திற்கு தங்கிலீஷில் "நம்ம ஸ்கூல்" என தற்போது பெயர் மாற்றம் செய்துள்ள தமிழக அரசு, அதன் தொடக்க விழாவிற்கு 3 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகவும் குறை கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments