நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற இரு அவைகளும் திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 7ஆம் தேதி தொடங்கிய நிலையில், வரும் 29 ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட காரணங்களால் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க எம்பிக்கள் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் முன்கூட்டியே கூட்டத்தொடர் முடிக்கப்பட்டதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.
Comments