மக்கள் நடமாட்டம் மிக்க நகரங்களில் கூட முகக்கவசம் கட்டாயமில்லை - மகாராஷ்ட்ரா அரசு அறிவிப்பு!
மும்பை, புனே, நாக்பூர், ஷீரடி உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் மிக்க நகரங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று மகாராஷ்ட்ரா அரசு அறிவித்துள்ளது.
அண்மையில் சீனாவில் பரவிய கோவிட் பாதிப்பு காரணமாக இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் சூழலில் மகாராஷ்ட்ரா அரசு மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்க மறுத்துவிட்டது.
95 சதவீதம் மாநில மக்கள் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டிருப்பதால் கோவிட் மீண்டும் பரவ வாய்ப்பில்லை என்று மாநில சுகாதார அமைச்சர் தனாஜி சாவந்த் செய்தியாளர்களிடம் கூறினார்.
சோதனை, கண்காணிப்பு, சிகிச்சை, தடுப்பூசி மற்றும் கோவிட் கால நெறிமுறைகளை உறுதி செய்வது போன்ற 5 அம்ச திட்டம் மூலம் கோவிட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.
Comments