பெண் கேட்டு கலெக்டர் ஆபீசை நோக்கி பேரணியாக வந்த மணமகன்கள்.. குதிரை மீதேறி பேண்டு வாத்தியங்கள் முழங்க மாப்பிள்ளைகள் ஊர்வலம்!

0 2589

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மணப்பெண் கேட்டு மணக்கோலத்தில் ஊர்வலமாக சென்றனர்.

சிலர் குதிரை மீதேறி வந்தனர். பேண்டு வாத்தியங்கள், திருமணப் பாடல்கள் முழங்க மாப்பிள்ளைகளின் ஊர்வலம் நடைபெற்றது. மாநிலத்தில் ஆண் பெண் விகிதாச்சாரம் காரணமாக ஏராளமான கிராமப்புற இளைஞர்கள் திருமணமாகாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது.

பெண் சிசுக்கொலை மற்றும் கருக்கொலையைத் தடுக்கும் சட்டத்தைக் கடுமையாக்கவும் கோரி அவர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments