தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா இன்று கோலாகலம்..!
தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மார்கழி மாதம் அமாவாசை மூலநட்சத்திரத்தில், ஆஞ்சநேயர் அவதரித்த நாளான இன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
ஆஞ்சநேய பக்தர்கள் விரதம் இருந்து வடைமாலை, துளசி மாலை , வெற்றிலை மாலை சாத்தி அனுமனை வழிபடுவது வழக்கம்.
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல்லில் உள்ள விஷ்வரூப ஆஞ்சநேயர் கோவில் பல்வேறு வண்ணங்களில் 2 டன்கள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டது. ஒரு லட்சத்து 8 வடைகள் கோர்க்கப்பட்ட மாலை ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அனுமனை தரிசனம் செய்தனர்.
Comments