ஆ.ராசாவின் பினாமி நிறுவனத்தின் ரூ.55 கோடி மதிப்பிலான சொத்து முடக்கம்..!
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவின் துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசாவின் பினாமி நிறுவனத்திற்கு சொந்தமாக கோவையில் உள்ள 55 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அமலாக்கத் துறையினர் முடக்கினர்.
ஆ.ராசா மத்திய அமைச்சராக இருந்த போது அவரது நண்பரான கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தை 2007ம் ஆண்டு தொடங்கி நிலத்தரகாக 4 கோடியே 56 லட்சம் பெற்றுள்ளார்.
அதன்பின்னர் எந்த வணிகமும் செய்யாத நிலையில் அந்த நிறுவனம் ராசாவின் குடும்பத்தார் பெயரில் இணைத்துக் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்திய அமலாக்கத்துறையினர், லஞ்சமாக பெற்ற கமிஷன் தொகையை பெறுவதற்காக மட்டுமே அந்த நிறுவனம் தொடங்கப்பட்டதை கண்டுபிடித்ததன் அடிப்படையில் நிறுவனத்தின் சொத்தை முடக்கம் செய்துள்ளனர்.
Comments