சீனாவில், நாள்தோறும் கொரோனா தொற்றால் 10 லட்சம் பேர் பாதிப்பு.. நாளொன்றுக்கு சுமார் 5,000 பேர் உயிரிழப்பு..!

0 3584

சீனாவில், நாள்தோறும் சுமார் பத்து லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாவதாகவும், சுமார் ஐந்தாயிரம் பேர் உயிரிழந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த மாதத்தில் தினசரி தொற்று பாதிப்பு சுமார் 37 லட்சமாக உயரும் என, லண்டனைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.

தொடர்ந்து, கொரோனா பாதிப்பு மார்ச் மாதத்தில் அதிகரித்து, தினசரி தொற்று பாதிப்பு 42 லட்சம் என்ற உச்சத்தை அடையும் எனவும், அந்நிறுவனம் அச்சம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments