கடந்த நவம்பரில் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில், 2.30 கோடி பதிவுகள் அகற்றம் - 'மெட்டா'
இந்தியா முழுவதும் கடந்த நவம்பர் மாதம், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் விதிமுறைகளை மீறி பதிவேற்றப்பட்ட 2 கோடியே 30 லட்சம் பதிவுகள் அகற்றப்பட்டதாக, தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது.
அவற்றுள், ஆபாசப் புகைப்படங்கள், வீடியோ இருந்ததாக 25 லட்சம் பதிவுகளும் , வன்முறையைத் தூண்டுவதாக, 21 லட்சத்து 50 ஆயிரம் பதிவுகளும், தற்கொலை உணர்வை ஊக்குவிப்பதாக கருதப்பட்ட 10 லட்சம் பதிவுகளும் அடங்கும் என மெட்டா தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தள கணக்குகளை ஹேக் செய்வது, போலி கணக்கு மோசடி, மார்பிங் படங்களை பதிவேற்றுவது தொடர்பாக காவல்துறை மூலம் 2 ஆயிரத்து 368 புகார்கள் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments