ஆன்லைன் வியாபாரத்தில் முதலீடு செய்து, அதிக லாபம் ஈட்டித்தருவதாக கூறி பணம் மோசடி.. 2 தம்பதிகள் கைது!
மதுரையில் ஆன்லைன் வியாபாரத்தில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறி, 70 லட்சம் ரூபாய் மற்றும் 143 சவரன் நகைகளை மோசடி செய்த 2 தம்பதிகள் கைது செய்யப்பட்டனர்.
புதூரை சேர்ந்த ஜாஹிர் உசேன் - பாத்திமா ஷமீம் தம்பதி, தாங்கள் வாடகை கட்டடத்தில் நடத்தி வந்த காய்கறி கடைக்கு, போலி ஆவணங்களை தயாரித்து, ஐயர்பங்களா பகுதியை சேர்ந்த சந்திராவிடம் 4 லட்சம் ரூபாய் குத்தகைக்கு கொடுத்து ஏமாற்றியுள்ளனர்.
தொடர்ந்து, அத்தம்பதி, புதூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்- பரமேஸ்வரி தம்பதியுடன் சேர்ந்து, மீண்டும் சந்திராவை அணுகி, புதிதாக ஆன்லைன் வியாபாரம் செய்யவுள்ளதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளனர்.
இதை நம்பிய சந்திரா, தன்னுடைய பணம் மற்றும் உறவினர்களிடமிருந்து பெற்ற 70 லட்சம் ரொக்கம், 143 சவரன் நகைகளை சிறுக சிறுக கொடுத்துள்ளார்.
ஒருகட்டத்தில் தான் ஏமாந்ததை அறிந்த சந்திரா, பணத்தை திருப்பி கேட்டபோது, 2 தம்பதிகளும் அவரை மிரட்டியதால், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Comments