கேரள துணி வியாபாரியிடம் காவலர்கள் போல் நடித்து 29 லட்சம் ரூபாய் மோசடி..5 பேர் கைது!

0 1585

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, காவலர்கள் போல் நடித்து, கேரள துணி வியாபாரியிடம் 29 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில்,
மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

கொச்சியை சேர்ந்த அன்சர் என்பவர், ஈரோட்டிற்கு துணி வாங்க வந்தபோது, காவலர்கள் எனக்கூறி வழிமறித்த நபர்கள், பணத்தை பறித்துக்கொண்டு, உரிய ஆவணங்களை கொடுத்து பணத்தை பெற்று செல்லுமாறு கூறியதாக, பெருந்துறை போலீசாரிடம் அவர் புகார் அளித்திருந்தார்.

இதுகுறித்த விசாரணையில், அன்சர், அவருடைய நண்பர் அபிஷேக் என்பவரிடமிருந்து ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பெற வந்ததும், அபிஷேக் போலி காவலர்களை வைத்து, பணத்தை பறித்து, கள்ள நோட்டு தராமல் ஏமாற்றியதும் தெரியவந்தது.

இந்த வழக்கில் ஒரு பெண் உட்பட 5 பேரை காவல் துறையினர் ஏற்கனவே கைது செய்திருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments