பிறமொழி ஆதிக்கத்தை எதிர்ப்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம் - முதல்வர்!
பிறமொழி ஆதிக்கத்தை எதிர்ப்பதில் நாம் உறுதியாக இருப்பதாகவும், இது பிறமொழி மீதான வெறுப்பு அல்ல என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற தமிழ் இசைச் சங்கத்தின் 80-ஆம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார் அப்போது ஒருவர் விரும்பினால் எத்தனை மொழி வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம்.
ஆனால் திணித்தால் எதையும் ஏற்கமாட்டோம் என்பதே நம்முடைய மொழிக் கொள்கை என்று கூறினார்.
முன்னதாக துணைவேந்தர் முனைவர் சவுமியாவுக்கு இசைப் பேரறிஞர் பட்டமும், சற்குருநாதனுக்கு பண் இசை பேரறிஞர் என்ற பட்டங்களையும் முதலமைச்சர் வழங்கினார்.
Comments