ஓபிஎஸ்-க்கு அதிமுக தலைமையகம் வக்கீல் நோட்டீஸ்..!
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் கட்சிக்கொடி, கட்சியின் பெயர், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்க்கவில்லை எனில், சட்ட ரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என, ஓ.பன்னீர்செல்வத்திற்கு, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து, வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தனது ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ். நடத்திய கூட்டத்திற்கு, அதிமுக தலைமையகத்தின் பெயரில் வெளியிடப்பட்ட அறிவிப்பு, சட்டப்படி தண்டனைக்குரியது என்றும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பை திரும்பப் பெறாவிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் வழக்கறிஞர் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments