சீனாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு பொருளாதாரப் பதில் ஏன் இல்லை? சோனியா காந்தி கேள்வி!
சீனாவின் ராணுவ விரோதப் போக்கிற்கு ஏன் பொருளாதாரப் பதிலடி கொடுக்கவில்லை என காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் தலைமை தாங்கினர்.
அப்போது உரையாற்றிய சோனியா, சீனா ஏன் நம்மைத் தொடர்ந்து தாக்கத் துணிகிறது? இந்த தாக்குதல்களை முறியடிக்க என்ன ஆயத்தங்கள் செய்யப்பட்டுள்ளன, மேலும் என்ன செய்ய வேண்டும்? என கேள்வி எழுப்பினார்.
சீனாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலாக ஏன் பொருளாதார நடவடிக்கை எடுக்க வில்லை என்றும் சோனியா காந்தி வினா எழுப்பினார். .
Comments