கொரோனா பாதிப்பு இன்னும் முடிவடையவில்லை.. மக்கள் உஷாரா இருக்கவும்- அமைச்சர் மன்சுக் மாண்டவியா

0 2171

கொரோனா தொற்று பாதிப்பு, இன்னும் முடிவுக்கு வரவில்லை என எச்சரித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கண்காணிப்பை பலப்படுத்தவும், உஷாராக இருக்கும்படியும் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.

உலக அளவில் திடீரென கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், சுகாதாரத்துறை உயரதிகாரிகள், வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர், எந்த சூழலையும் சமாளிக்க அரசு தயாராக உள்ளதாக டிவிட்டரில் பதிவிட்டார். அதேசமயம், கூட்டம் நிறைந்த இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டுமெனவும், இணை நோய்கள் உள்ளவர்கள், வயதானவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments