மாமாகுட்டியை நம்பி 6 மாத கர்ப்பிணியாய் தவிக்கும் இளம் பெண்..! வேறு பெண்ணை மணந்த ex

0 2938

சென்னையில், ஆறு வருடங்களாக துரத்தித் துரத்தி காதலித்த காதலன், கர்ப்பமாக்கி விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ததால் அந்த கர்ப்பிணி காவல் நிலையத்தில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த பெண் அயனாவரம் உதவி ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது 22 வயது மகள் கடந்த செப்டம்பர் மாதம் வீட்டில் மிகவும் சோர்வாக இருந்ததாகவும், அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது தனது மகள் 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

கர்ப்பம் குறித்து தனது மகளிடம் விசாரித்த போது, முன்னர் தங்கள் வீட்டருகே வசித்து தற்போது பெரவள்ளூருக்குச் சென்றுவிட்ட சதீஷ் என்ற 24 வயது இளைஞரை கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்ததாகவும், இருவரும் நெருங்கி பழகிய நிலையில் தற்போது தனது மகள் 6 மாதம் கர்ப்பமாக உள்ளதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

வீட்டில் பெரியவர்களை அழைத்து வந்து மகளுக்குத் திருமணம் நடத்திவைக்க ஏற்பாடு செய்தபோது, வேறொரு பெண்ணை கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி சதீஷ் திருமணம் செய்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். சதீஷ் திருமணம் செய்ததை அவரது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் கண்டு அதிர்ச்சியடைந்து, தன்னை அழைத்துக்கொண்டு பெரவள்ளூரில் உள்ள சதீஷ் வீட்டிற்குச் சென்று நியாயம் கேட்டபோது, தனது மகளை காதலிக்கவே இல்லை எனக்கூறி அவர் துரத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கருவை வயிற்றில் சுமந்துகொண்டு மன உளைச்சலில் இருந்து வந்த தனது மகள் கடந்த அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி தற்கொலைக்கு முயன்று கே.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும், பின் இச்சம்பவம் தொடர்பாக அயனாவரம் காவல் நிலையத்தில் நியாயம் வேண்டி புகார் அளித்தபோது புகாரை விசாரிக்காமல் பெரவள்ளூருக்கு மாற்றிவிட்டதாக போலீசார் கூறியதாகவும் புகாரில் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆன பின் தனது மகளிடம் வீடியோ காலில் தொடர்புகொண்ட காதலன் சதீஷ் தனக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும், தன்னால் ஒன்றும் செய்ய முடியாது எனவும்கூறி தனது மகளை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாகவும் தெரிவித்து, தனது மகளை காதலித்து கர்ப்பமாக்கி பின் வேறொரு பெண்ணையும் திருமணம் செய்துகொண்ட மகளின் காதலன் சதீஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் மீதான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உதவி ஆணையர் ஜவகர் உத்தரவிட்டதின் பேரில் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இளம் பெண்ணின் காதலனான சதீஷை நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பெண்ணை திருமணம் செய்வதாக மோசடி செய்தது தெரியவரவே நம்பவைத்து மோசடி செய்தல், பாலியல் பலாத்காரம் செய்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் சதீஷ்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் . இந்நிலையில் வழக்கு மட்டும் பதிவு செய்துள்ளனர்.

ஆறு வருடங்களாக காதலித்து தன்னை 6 மாதம் கர்பமாக்கிவிட்டு தற்போது தன்னை காதலிக்கவே இல்லை என கூறி நாடகமாடும் காதலன் சதீஷ் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து அவனை கைது செய்ய வேண்டும் எனவும், 6 மாத கர்ப்பமாக உள்ள நிலையிலும், நியாயம் கிடைப்பதற்காகவே தொடர்ந்து அலைந்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

காதல் ரசம் சொட்ட சொட்ட வீடியோக்களை அனுப்பி தன்னை துரத்தி துரத்தி காதலித்து ஆசை தீர அனுபவித்து கர்ப்பமாக்கிவிட்டு, திருமணம் செய்வான் என காத்திருந்த நிலையில் தன்னை ஏமாற்றி விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்ட சதீஷ் வேறு யாரையும் ஏமாற்றக்கூடாது எனவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவனை சிறைக்கு அனுப்புவார்கள் என நினைத்து இருந்த நிலையில் அவரை ராஜமரியாதையோடு வழக்கறிஞர்களுடன் போலீசார் அனுப்பிவைத்துள்ள தகவலை கேட்டு மீண்டும் காவல்நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் கேட்டபோது அலட்சியமாக கூறியதாக வேதனையோடு தெரிவித்துள்ளார் அந்த பெண்

வயிற்றில் 6 மாத குழந்தையோடு, காதலன் கைவிட்டு சென்ற நிலையில் போலீசாரும் கைவிட்டதால் செய்வதறியாது தவித்து கொண்டிருக்கும் அந்த இளம்பெண் விவகாரத்தில் உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதே அந்த இளம்பெண்ணின் குடும்பத்தாரின் கோரிக்கையாக உள்ளது..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments