கும்பகோணம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திமுக உறுப்பினர்களுக்கும், காங்கிரஸ் மேயருக்கும் இடையே காரசார வாக்குவாதம்
கும்பகோணம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திமுக உறுப்பினர்களுக்கும், காங்கிரஸ் மேயருக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.
கும்பகோணம் மாமன்ற கூட்டம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. திமுகவை சேர்ந்த துணை மேயர் தமிழழகனை செயல் தலைவர் என குறிப்பிட்டு சுவரொட்டி ஓட்டியது தொடர்பாக மேயர் சரவணன் கேள்வி எழுப்பியதால் அவருக்கும் திமுக உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால், மாமன்ற கூட்டத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை நிறைவேற்ற திமுக உறுப்பினர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில்,
மேயர் தான் பேசிய கருத்தை திரும்ப பெற்றுக் கொண்டதால், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Comments