குளிர்காலத்தின் போது கொரோனா தொற்றின் மூன்று அலைகள் தாக்கக்கூடும் - சீன தொற்று நோயியல் நிபுணர்கள் எச்சரிக்கை!
சீனாவில், குளிர்காலத்தின் போது கொரோனா தொற்றின் மூன்று அலைகள் தாக்கக்கூடும் என தொற்று நோயியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மருத்துவ பணியாளர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், மருத்துவமனைகளின் பணி மந்தமாகியுள்ள நிலையில், மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாத சூழல் உள்ளது.
சீன தொற்று நோயியல் நிபுணர்களின் கணிப்புப்படி, முதல் அலை தற்போது தொடங்கியுள்ள நிலையில், ஜனவரி மாத மத்தியில் முதல் அலை முடிவுக்கு வரும் என குறிப்பிட்டுள்ளனர்.
ஜனவரி 21-ஆம் தேதி, சந்திர புத்தாண்டை முன்னிட்டு ஏராளமானோர் நாடு முழுவதும் பயணம் செய்வார்கள் என்பதால், இரண்டாம் அலை பரவக்கூடும் எனவும், பிப்ரவரி கடைசி முதல் மார்ச் மத்தியில் வரை, விடுமுறை முடிந்து மக்கள் பணிக்கு திரும்பும்போது மூன்றாம் அலை பரவக்கூடும் எனவும் எச்சரித்துள்ளனர்.
Comments