என்.ஐ.ஏ அதிகாரிகள் போல நடித்து தொழிலதிபர் வீட்டில் ரூ.2 கோடி கொள்ளை.. ரூ.1.5 கோடி மீட்ட போலீசார்!

0 1750

சென்னை முத்தியால்பேட்டையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் போன்று நடித்து தொழிலதிபரின் வீட்டில் 2 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் முக்கிய கூட்டாளியை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 13ம் தேதி ஜமால் என்ற தொழிலதிபரின் வீட்டுக்கு சென்ற 7 பேர் கும்பல், தாங்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் எனவும் கோவை கார் வெடிப்பு வழக்கு குறித்து சோதனையிடுவதாகவும் கூறி வீட்டிலிருந்து 2 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தில் வேங்கை அமரன் உள்ளிட்ட 6 பேர் சரணடைந்த நிலையில், அவர்களை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த போலீசார், கொள்ளைக்கு திட்டம் வகுத்த முகமது பாசில் என்பவனை கைது செய்து, ஒன்றரை கோடி ரூபாயை மீட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments