கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டத்தால் கைவிடப்பட்ட வீரர்கள் ஊர்வலம்.. ரசிகர்கள், போலீசார் இடையே மோதல்!

0 1658

உலகக்கோப்பையுடன் நாடு திரும்பிய அர்ஜென்டினா வீரர்களை வரவேற்க, அதிகளவில் ரசிகர்கள் குவிந்ததால், பேருந்து ஊர்வலத்தை கைவிட்ட வீரர்கள், ஹெலிகாப்டரில் வலம் வந்தனர்.

பியூனஸ் அயர்சில், சுமார் 30 கிலோமீட்டர் தொலைவிற்கு திறந்த பேருந்தில் கோப்பையுடன் வீரர்கள் ஊர்வலம் செல்ல திட்டமிட்ட நிலையில், அதிகாலை முதலே அவர்களை காண லட்சக்கணக்கில் ரசிகர்கள் அணிவகுத்து நின்றனர்.

ரசிகர்களின் கூட்டத்தில் பேருந்து ஊர்ந்து சென்ற நிலையில், கட்டுக்கடங்காத கூட்டத்தால் பேருந்து ஊர்வலம் கைவிடப்பட்டது. பின்னர், அணிவகுப்பு நடத்த திட்டமிட்ட பாதையில் ஹெலிகாப்டரில் வீரர்கள் வலம் வந்தனர்.

பேருந்து ஊர்வலம் கைவிடப்பட்டதற்கு போலீசாரே காரணம் என அர்ஜென்டினா கால்பந்து சங்கம் குற்றம்சாட்டியது. அணிவகுப்பு பாதியில் கைவிடப்பட்டதால், ரசிகர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments