பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை திறப்பு விழாவில் அதிமுக, திமுக கட்சியினரிடையே தள்ளுமுள்ளு!

0 1948

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை பணியை துவக்கி வைக்க வருகை தந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி. அன்பழகனுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் தகராறில் ஈடுபட்டதால், இருகட்சியினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த போலீசார், திமுக அதிமுகவினர் இடையேயான தள்ளுமுள்ளுவை கட்டுப்படுத்தினர். டி.எஸ்.பி சிந்து நடத்திய சமாதான பேச்சுவார்த்தைக்கு பின் இரு தரப்பினரும் இணைந்து அரவை பணியை துவக்கி வைத்தனர்..

நடப்பாண்டில் பாலக்கோடு சர்க்கரை ஆலையில் 2 லட்சம் டன் கரும்பு அரவைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments