“2023-ல், ஹைட்ரஜனில் இயங்கும் வந்தே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்” - அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

0 1985

ஹைட்ரஜனில் இயங்கும் வந்தே மெட்ரோ ரயில்கள், 2023-ம் ஆண்டுக்குள் இயக்கப்படும் என மத்திய இரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, ஹைட்ரஜனில் இயங்கக்கூடிய, முற்றிலும் இந்தியாவில் வடிவமைக்கப்படும் வந்தே மெட்ரோ ரயில்கள், 1950 மற்றும் 60-களில் வடிவமைக்கப்பட்ட ரயில்களுக்கு மாற்றாக இயக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

வந்தே மெட்ரோ ரயில்கள், ஏழை - நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்படுவதாகவும், அதன் வடிவமைப்பு 2023-ம் ஆண்டு மே - ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும் என அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments