ரஷ்ய கட்டுப்பாடு பகுதிகளை நிர்வகிப்பது மிகவும் சவாலாக உள்ளது - புடின்

0 1641

உக்ரைன் படைகளின் தொடர் தாக்குதலால், ரஷ்ய கட்டுப்பாட்டிலுள்ள 4 உக்ரைனிய மாகாணங்களை நிர்வகிப்பது, மிகவும் சவாலாக உள்ளதாக, அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

புடின் இவ்வாறு வெளிப்படையாகத் தெரிவிப்பது, உக்ரைன் படையெடுப்பு அவர் எதிர்பார்த்தவண்ணம் அமையவில்லை என்பதை காட்டுவதாக, அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

ரஷ்ய கட்டுப்பாடு பகுதிகளில் வசிக்கும் உக்ரைன் ஆதரவாளர்களை கண்டறியுமாறும், எல்லைகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறும், ராணுவத்தினருக்கு புடின் உத்தரவிட்டுள்ளார்.

தாக்குதலை தீவிரப்படுத்த, பெலாரஸின் உதவியை புடின் நாடக்கூடும் என உக்ரைன் அச்சம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments