ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் ஊழியரின் 5 சவரன் நகை திருட்டு..!

0 1825

சென்னை எழும்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், பெண் ஊழியரிடம் இருந்து திருடப்பட்ட 5 சவரன் தங்க செயினை, போலீசார் நூதன உத்தியை கையாண்டு,மீட்டு கொடுத்தனர்.

கடந்த 17ம் தேதி பணியை முடித்துவிட்டு ஓய்வறையில் உறங்கிய பெண் ஊழியர் உஷாவின் தாலிச்செயின் காணாமல் போனது.
சிசிடிவி மூலம் வெளியாட்கள் யாரும் உள்ளே வரவில்லை என்பதை உறுதிப்படுத்திய போலீசார், மருத்துவமனை ஊழியர்களே செயினை திருடியதையும் கண்டுபிடித்தனர்.

பிரச்சனையை நூதனமாக கையாண்ட போலீசார், மின் விளக்கு அணைக்கப்பட்ட அறையில் ஒரு பை வைக்கப்படும் என்றும், நகையை திருடியவர்கள் அதில் போட்டுவிட்டு யாருக்கும் தெரியாமல் வந்துவிடலாம் என்றும் கூறி, ஊழியர்கள் 11 பேரையும் ஒவ்வொருவராக உள்ளே அனுப்பினர். அனைவரும் சென்று வந்த பிறகு, பையில் தாலி செயின் இருந்ததை அடுத்து, போலீசார் அதை உஷாவிடம் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments