இந்திய விளையாட்டுகள், சிறுதானிய உணவுகளை ஊக்குவிக்க வேண்டும்'' - பிரதமர் மோடி

0 1525

கபடி உள்ளிட்ட இந்திய விளையாட்டுகளையும், சிறுதானிய உணவுகளையும் ஊக்குவிப்பதில் பாஜக எம்பிக்கள் கவனம் செலுத்த வேண்டும் என, பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற பா.ஜ.க. குழு கூட்டத்தில், பேசிய பிரதமர், மத்திய அரசின் வேண்டுகோளின்படி, 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், எம்.பி.க்கள் தாங்கள் நடத்தும் கூட்டங்களில், சிறுதானியப்பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கலாம் என்றும் அறிவுறுத்தினார்.

இதனிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் குடியரசுத்துணை தலைவர் ஜெக்தீப் தங்கர், காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி, சிறுதானிய உணவுகளை மதிய உணவாக அருந்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments