வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!
சென்னையை அடுத்த ஆவடியில் வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில், ஒருவர் உயிரிழந்த நிலையில், 3 பேர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆவடி கலைஞர் நகர் பகுதியில் சங்கர் ராஜ் என்பவர் தனது தாய், மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் வசித்து வந்த நிலையில், நேற்றிரவு சங்கர் ராஜின் தாய் ரோஜா சமைப்பதற்காக, கேஸ் அடுப்பை பற்ற வைத்தபோது, சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடித்துள்ளது.
அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைத்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த ரோஜா, அவரின் மகன் சங்கர்ராஜ் மற்றும் 2 பேரக்குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ரோஜா இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Comments