முடிவுக்கு வந்தது ஹாலிவுட் பிரபலங்கள் ஜானிடெப்-ஆம்பர்ஹெர்ட் வழக்கு.. ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

0 7775

பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தின் ஹீரோவான ஹாலிவுட் நடிகர் ஜானிடெப் உடனான அனைத்து வழக்குகளையும், 1 மில்லியன் அமெரிக்க டாலரை நஷ்ட ஈடாக வழங்கி முடித்துக்கொள்வதாக, நடிகையும், அவரது முன்னாள் மனைவியுமான ஆம்பர்ஹெர்ட் அறிவித்துள்ளார்.

ஹாலிவுட் பிரபலங்கள் இருவரும் 2015ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்ட நிலையில், 2016ம் ஆண்டிலேயே ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டியதோடு, பரஸ்பரம் மான நஷ்ட வழக்கும் தொடுத்தனர்.

தனித்தனியாக நடைபெற்ற வழக்கில், இருவருமே ஒருவருக்கொருவர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சுமார் 6 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் அனைத்து வழக்குகளையும் சமரச தீர்வு அடிப்படையில் இருவரும் முடித்துக்கொள்வதாக, ஆம்பர் அறிவித்ததை, ஜானிடெப்பின் வழக்கறிஞர்களும் ஏற்றுக்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments