மீ டூ மூலமாக 80 பெண்கள் ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீதான பாலியல் புகார் உறுதி
மீ டூ மூலமாக பாலியல் புகாருக்கு உள்ளான பிரபல ஆங்கில சினிமா தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீதான குற்றச்சாட்டுகளை, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.
ஷேக்ஸ்பியரின் காதல் உள்ளிட்ட புகழ்பெற்ற ஏராளமான திரைப்படங்களை தயாரித்தவரான அமெரிக்காவின் ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு எதிராக, 2017ம் ஆண்டில் சுமார் 80 பெண்கள் பாலியல் புகார்களை தெரிவித்திருந்தனர்.
இதில், 2 பெண்கள் அளித்த புகாரில், 70 வயதான ஹார்விக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது சிறையில் உள்ளார்.
இந்நிலையில், 5 பெண்கள் அளித்த மற்றொரு புகாரில் அவர் மீதான குற்றத்தை லாஸ்ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் உறுதி செய்ததால், அவருக்கு மேலும் 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
Comments