நயனுக்கு லவ்யூ சொல்லி பதிலுக்கு நன்றி சொன்னால் கடுப்பாக்கலாம் விக்னேஷ் சிவனை..! திரையரங்கில் ரசிகருடன் ‘கனக்ட்’

0 3600
நயனுக்கு லவ்யூ சொல்லி பதிலுக்கு நன்றி சொன்னால் கடுப்பாக்கலாம் விக்னேஷ் சிவனை..! திரையரங்கில் ரசிகருடன் ‘கனக்ட்’

சென்னை தியாகராய நகரில்  கணவர் விக்னேஷ்சிவனுடன் கனெக்ட் படம் பார்க்கச் சென்ற நடிகை நயன்தாராவை நோக்கி கூட்டத்தில் இருந்த ரசிகர் 'ஐ லவ்யூ' என்று சத்தமிட, பதிலுக்கு யார் என்று விசாரித்து அந்த ரசிகருக்கு நன்றி சொல்லி சமாளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் நயன்தாரா.

ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரித்து இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நாயகியாக நடித்துள்ள படம் கனெக்ட்

கனெக்ட் படத்தின் சிறப்பு காட்சி சென்னை தியாகராய நகரில் உள்ள திரையரங்கில் நடைபெற்றது. நடிகை நயன்தாரா, அவரது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன், நடிகர்கள் வினய், ஜி.பி முத்து மற்றும் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர், நடிகைகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தியேட்டர் வளாகத்திற்கு வந்த விக்னேஷ் சிவன் மற்றும் ஜி.பி முத்துவுக்கு ரசிகர்கள் ஆரவாரமாக உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நயன்தாராவின் கார் தியேட்டருக்குள் வந்ததும், நயன்தாராவை காண காத்திருந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரமாக சத்தமிட்டு தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்

தியேட்டரின் மேல் அறைக்கு பவுன்சர்கள் பாதுகாப்புடன் நயன்தாராவை விக்னேஷ் சிவன் அழைத்துச்சென்ற போது, நயன்தராவை நோக்கி கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர், லவ் யூ மேம் என்று சொல்ல, அதனை கேட்டு யார் அவர் ? என்று விசாரித்த நயன்தாரா, ஒருவித வெட்கத்துடன் தேங்க்யூ என்று சிரித்து கொண்டு பதில் அளித்து சமாளித்தார்.

இதனை அருகில் இருந்த விக்னேஷ் சிவன் ((விதியே என்று)) சிரித்தவாறு பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் விக்னேஷ் சிவன்... முதல் முறையாக இடைவேளை இல்லாமல் ஒரு படம் எடுத்திருக்கிறோம் என்றார். பஹத் பாசில் நடித்துள்ள மலையாளப் படம் ஒன்றில் தண்ணீர் தெளித்து குழந்தை இறந்து விடும். அதை போல இந்த படத்திலும் ஒரு காட்சியை காப்பி அடித்து காட்சி வைத்திருக்கிறீர்கள் போல என்ற கேள்விக்கு, அது இயக்குநரோட பார்வை எல்லா கதைக்கும் ஐந்து, ஆறு பக்கங்கள் இருக்கும். அதில் நாம் ஒன்றை எடுத்து பண்ணியிருக்கோம் என்று சமாளித்தார்.

படத்தில் ஒரு குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்வது போல நயன்தாரா கதாபாத்திரம் இருக்கிறது. தற்போது நேரில் அம்மாவாகி இருக்கிறார். குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்கிறார் எனவும் விக்னேஷ்சிவன் தெரிவித்தார். எப்போதுமே புதுமையாக ஒரு விஷயம் வந்தால் அதற்கான ஒரு விவாதம் இருக்கக் தான் செய்யும். நாங்கள் அதை புரொடக்டிவ் ஆக தான் பார்க்கிறோம். நல்லவிதமாக வரும் என்று நினைக்கிறோம். டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 300 திரையரங்குகளில் கனெக்ட் படம் வெளியாகிறது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments