பி.ஃஎப்.ஐ. உள்ளிட்ட அமைப்புகளை தடை செய்ததற்கு போதுமான காரணங்கள் உள்ளதா..? இல்லையா..? - இன்று தொடங்கியது விசாரணை..!

0 1421
பி.ஃஎப்.ஐ. உள்ளிட்ட அமைப்புகளை தடை செய்ததற்கு போதுமான காரணங்கள் உள்ளதா..? இல்லையா..? - இன்று தொடங்கியது விசாரணை..!

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்கு தடை விதிக்க, போதுமான காரணங்கள் உள்ளதா? இல்லையா? என்பது குறித்த விசாரணை, சென்னையில் இன்று தொடங்கியது.

உபா சட்டத்திற்கான தீர்ப்பாயத்தின் தலைவரான டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமார் சர்மா, பசுமை வழிச்சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில நீதித்துறைப் பயிலக வளாகத்தில் 3 நாட்களுக்கு இந்த விசாரணையை நடத்துகிறார். 

இந்த தீர்ப்பாயம், நாடு முழுவதும் விசாரணை நடத்தி, 6 மாதத்திற்குள், மத்திய அரசு விதித்த தடைக்கு போதுமான ஆதாரங்கள் உள்ளதா? இல்லையா? என்பதை உறுதிசெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments