பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன பொருட்கள்..? பரிசுத் தொகை எவ்வளவு..? - தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஆலோசனை..!

0 3112
பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன பொருட்கள்..? பரிசுத் தொகை எவ்வளவு..? - தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஆலோசனை..!

தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு அளிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 23 லட்சத்து 51ஆயிரத்து 250 குடும்ப அட்டைகள் உள்ள நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன பொருட்கள் வழங்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் கூட்டத்தில், பொங்கல் பரிசுத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்க முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments