சிவாஜி கணேசனுக்கு எந்த அரசும் உரிய மரியாதை தரவில்லை..! இயக்குனர் பாரதிராஜா ஆதங்கம் 

0 3153

நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு எந்த அரசும் முறையாக மரியாதை செய்யவில்லை என்றும், அவருக்கு பத்மஸ்ரீ விருது கூட வழங்கப்படவில்லை எனவும், இயக்குனர் பாரதிராஜா வேதனை தெரிவித்தார்.

சிவாஜி கணேசன் வாழ்க்கை வரலாறு குறித்து, மருதுமோகன் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய இயக்குனர் பாரதிராஜா, இந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

பாடல்களுக்கு உதட்டு அசைவுகள் கொடுப்பதில், சிவாஜி கணேசன் மாதிரி யாரும் கொடுக்க முடியாது என்றும், அவருடனான தனது சினிமா அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

சிவாஜி குறித்து உணர்வு பொங்க பேசிய இசையமைப்பாளர் இளையராஜா, சிவாஜிக்கு பெருமை சேர்க்கும் விதமாக, தான் வெள்ளிக்குதிரை ஒன்றை பரிசாக அளித்த நிகழ்வை, நினைவு கூர்ந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments