அஜர்பைஜானிலிருந்து, ருமேனியா வரை, ஆயிரம் மெகாவாட் மின் பகிர்மான கேபிள் அமைக்க திட்டம்..!
அஜர்பைஜானிலிருந்து, ருமேனியா வரை, உலகில் முதல்முறையாக, ஆயிரத்து 100 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆயிரம் மெகாவாட் மின் பகிர்மான கேபிள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடுகள், மின் தேவைகளுக்காக ரஷ்யாவை சார்ந்திருப்பதை குறைக்க, அஜர்பைஜானிடம் மின்சாரம் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளன.
இதற்காக, ஆயிரத்து 100 கிலோமீட்டருக்கு மின் பகிர்மான கேபிள் அமைக்கும் திட்டத்தில் Azerbaijan, Georgia, Romania, Hungary ஆகிய நாடுகளின் தலைவர்கள் கையெழுத்திட்டனர்.
கருங்கடலுக்கு அடியில் செல்லக்கூடிய இந்த ஆயிரம் மெகாவாட் கேபிளுக்கு ஐரோப்பிய ஆணையம் 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
Comments