"வைகை" அடுக்குமாடி அலுவலக வளாகத்திற்கு அடிக்கல் நாட்டி, பூமி பூஜைகளில் பங்கேற்றார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்..!

0 1670

சென்னை சுங்க இல்லத்தில் 'வைகை' என்னும் பெயரில்,  91 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள புதிய அலுவலக கட்டடத்திற்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்.

இரண்டு அடித்தளங்கள், ஒன்பது தளங்கள் கொண்ட அந்த கட்டிடடத்தில், ஏற்றுமதி, இறக்குமதி தொடர்புடைய அரசின் அலுவலகங்கள் அமைய உள்ளன.

2024ஆம் ஆண்டில் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டுள்ள அந்த கட்டடம், பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, தொழிற்துறைக்கான வசதிகளை மேலும் சீர்மைப்படுத்தும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன், வர்த்தக முன்னேற்றத்தை இந்தியா அடைய, சுங்கத்துறையின் பணி முக்கியமானது என்றும், இந்த புதிய கட்டடம், சுங்க அதிகாரிகளுக்கு அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் என்றும் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments