வாடிக்கையாளர்களிடம் அதிகமாக வசூலித்த தொகையை பங்கு பிரிப்பதில் மதுபானக்கடை ஊழியர்கள் இடையே தகராறு..!
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே புளியால் கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடையில் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் அதிக தொகையை பிரித்து கொள்வதில் தகராறு ஏற்பட்டு ஊழியர்கள் தாக்கிக் கொள்ளும் காட்சிகள் செல்போன் வீடியோவில் பதிவாகியுள்ளது.
விற்பனையாளர் கோட்டைச்சாமி நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் அதிகமாக வசூலிக்கும் பணத்தை எடுத்து கொள்வதை தட்டிகேட்க வேண்டும் என்று கடை மேலாளர் முருகனிடம் மற்றொரு விற்பனையாளர் சுதாகர் பேசும் ஆடியோவும் வெளியாகியுள்ளது.
Comments