தமிழகம் முழுவதும் பள்ளிச் செல்லா குழந்தைகளை நாளை முதல் கணக்கெடுக்கும் பணி - பள்ளிக்கல்வித்துறை
தமிழகம் முழுவதும் பள்ளிச் செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி நாளை முதல் தொடங்குகிறது.
முன்னறிவிப்பின்றி தொடர்ந்து 30 நாட்கள் பள்ளிக்கு வராத குழந்தைகள், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் ஆகியோர் பள்ளி செல்லாக் குழந்தைகளாக கருதப்படுவார்கள் என்றும் இவர்களை கண்டறிய ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
குழுவினர் வீடுவீடாகச் சென்று வரும் ஜனவரி 11ம் தேதி வரையில் ஆய்வு நடத்துவதோடு பள்ளிச் செல்லா குழந்தைகளை கண்டறிந்தால் அவர்களை பள்ளியிலோ அல்லது சிறப்பு வகுப்பிலோ சேர்க்க நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments