பீகாரில் தேஜஸ்வி யாதவை முதலமைச்சராக்க வேண்டும்: பிரசாந்த் கிஷோர்
பீகாரில் தேஜஸ்வி யாதவை முதலமைச்சராக்க வேண்டும் என்று தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் பாதயாத்திரை நடத்தி வரும் பிரசாந்த் கிஷோர் தனது டிவிட்டர் பதிவில், கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு அதிக எம்எல்ஏக்கள் இருப்பதால் தேஜஸ்வியை மீதமுள்ள 3 ஆண்டுகளுக்கு முதலமைச்சராக்கினால் அவரது செயல்திறனை பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொண்டு அடுத்த தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
Comments