ஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்வுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

0 1551

ஆவின் பொருட்களை இனி பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலைக்கு தமிழக அரசு தள்ளியுள்ளதாக, நெய், வெண்ணெய் விலை உயர்வை மேற்கோள்காட்டி எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இது குறித்து டிவிட்டரில் பதிவிட்ட அவர், கடந்த மார்ச் மாதம் 515 ரூபாய்க்கு கிடைத்த ஆவின் நெய், தற்போது 630 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், வெண்ணையும் கிலோவிற்கு 20 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெறக்கோரி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments