விளம்பரதாரர்கள் வெளியேறியதால், புதிய முதலீட்டாளர்களை தேடும் எலான் மஸ்க் குழு
டிவிட்டர் சமூக வலைதளத்திலிருந்து விளம்பரதாரர்கள் வெளியேறி வரும் நிலையில், புதிய முதலீட்டாளர்களை எலான் மஸ்க்கின் குழுவினர் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எலான் மஸ்க் டிவிட்டரை கையகப்படுத்தியது முதல் பல்வேறு நெறிமுறைகளை வகுத்ததால், விளம்பரதாரர்கள் வெளியேறினர்.
இதனையடுத்து, வருவாய் மற்றும் டிவிட்டரை கையகப்படுத்த எலான் மஸ்க் பெற்ற 13 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுக்கான வட்டி செலுத்தும் திறன் பாதிக்கப்பட்டது.
இதனால், எலான் மஸ்க் டிவிட்டரை கையகப்படுத்த செலுத்திய 54 புள்ளி 20 அமெரிக்க டாலர் விலையில், டிவிட்டர் பங்குகளை வழங்கவுள்ளதாகவும், அதற்கு சாத்தியமான முதலீட்டாளர்களை கண்டறிந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments