எல்லை அருகே கிராமங்கள் கட்டமைப்பை விரிவுபடுத்தி வரும் சீனா
எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே மாதிரி கிராமங்களை சீனா விரிவுபடுத்தி கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிலிகுரி வழித்தடத்தில் உள்ள சும்பி பள்ளத்தாக்கு, சிக்கிம், அருணாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களை ஒட்டிய எல்லையில், கிராமங்களை சீனா விரிவுபடுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Pangda, Qangze, Churup பகுதிகளில் புதிய கிராமங்கள், சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகளை சீனா கட்டமைத்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் சீனாவிற்கு போட்டியாக, இந்தியாவும் சாலைகள், கிடங்குகள் மற்றும் சுரங்கப்பாதைகளை அமைத்து வருகிறது.
Comments