முன்னாள் அதிபர் டிரம்ப் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய பரிசீலனை
அமெரிக்க நாடாளுமன்ற கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நாடாளுமன்ற தேர்வுக்குழு, முன்னாள் அதிபர் டிரம்ப் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை ஏமாற்ற சதி செய்தது மற்றும் காங்கிரசின் அதிகாரப்பூர்வ நடைமுறைக்கு இடையூறு செய்தது தொடர்பாக டிரம்ப் மீது பிரதிநிதிகள் குழு குற்றச்சாட்டு தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறப்பு குழு மற்றும் துணைக்குழு எடுத்த முடிவின் பேரில், 9 பேர் கொண்ட குழு டிரம்பிற்கு அபராதம் விதிக்கும் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்து, நீதித்துறையிடம் சமர்பிக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
Comments