பாலியல் தொல்லையில் இருந்து தற்காப்பு.. பள்ளி மாணவி உருவாக்கிய பிரத்யேக காலணி..!
பாலியல் சீண்டல்களில் இருந்து பெண்கள் தங்களை தாங்களே தற்காத்து கொள்ளும் விதமாக பேட்டரி மூலம் மின் இணைப்பு மற்றும் ஜிபிஎஸ் வசதி கொண்ட பிரத்யேக காலணியை கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பள்ளி மாணவி உருவாக்கி உள்ளார்.
கல்புர்கியில் உள்ள எஸ்ஆர்என் மேத்தா பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி விஜயலட்சுமி தான் உருவாக்கியுள்ள காலணியின் சிறப்பு குறித்து விளக்கினார்.
யாராவது பாலியல் தொல்லை கொடுக்க முற்பட்டால், காலணிகளால் குற்றவாளியை தாக்கும் போது மின்சாரம் பாயும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த காலணி ஜிபிஎஸ் அம்சத்தையும் கொண்டுள்ளது.
ஜிபிஎஸ் மூலம் பாலியல் தொல்லைக்கு ஆளானவர் எங்கே இருக்கிறார் என்பதை அவரது பெற்றோருக்கு இருப்பிடத்தை எச்சரிக்கை ஒலியுடன் அனுப்பும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
Comments