மதுபோதையில் நண்பர்களுடன் நீர்வீழ்ச்சியில் குளிக்கும் போது தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு

0 12757

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே நீர்வீழ்ச்சியில் நண்பர்களுடன் குளிக்க சென்ற போது அடித்து செல்லப்பட்ட நபரின் உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

அங்குத்தி ஜொணை பகுதியில் உள்ள நீர்விழ்ச்சிக்கு நேற்று மாலை கோவிந்தன் என்பவர் தடையை மீறி நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார்.

அப்போது மதுபோதையில் இருந்த கோவிந்தன், நீரில் விளையாடி கொண்டிருந்ததை சக நண்பர்கள் வீடியோ பதிவு செய்துகொண்டிருக்கும் போதே அவர் நீரில் அடித்து செல்லப்பட்டார்.

இந்நிலையில், தடாகத்தில் பாறைக்கு அடியில் சிக்கியிருந்த கோவிந்தனின் சடலத்தை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments